இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 மார்ச், 2018

நடந்த உண்மை கதை - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

நடந்த   உண்மை   கதை

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.


திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

சர்வம்சிவார்ப்பணம்
      எதுவும்
எனக்கில்லை
எல்லாம் உனக்கே
இறைவா !

பிரகதீஸ்வரர்

விமர்சிக்கும் உலகம் இது



பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 

நீதி: 
*****

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

*கேள்வி : யானை கடவுளா? கடவுளை எலி சுமக்கிறதா? பலரும் என்னிடம் கேலி பேசுகிறார்கள்... தங்களது விளக்கம் என்ன...?*



இந்துமத கடவுள் உருவங்களைப் பார்த்து கிண்டலடிப்பது சிலருக்கு பொழுது போக்கு, சிலருக்கு மலிவான வியாபாரம்...

இந்த மாதிரியான மனிதர்களின் வாயில் அகப்பட்டு பல நேரங்களில் அவதிப்படுவது நம் பிள்ளையார் உருவமாகும்...

அவரின் யானை முகத்தை கேலி செய்வது ஒருபுறம் என்றால், யானை அளவுள்ள விநாயகர் எலி வாகனத்தில் இருப்பது பெரிய அளவில் கிண்டலடிக்கப் படுகிறது...

அந்தக் கேலியை கேட்கும் நமக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படும்... 

அது எப்படி எலியின் மீது யானை வரும் என்றும் தோன்றும்...

உயிர்கள் எல்லாமே பரம் பொருளுக்கு வாகனம் தான்...

உயிர்களில் யானையின் உயிர் பெரியதென்றும் எலியின் உயிர் சிறியது என்றும் கிடையாது...

எல்லா உயிர்களும் சமமானவைகள் தான்... 

உருவத்தில் தான் பெரியது என்றும் சிறியது என்றும் வேற்றுமைகள் தெரிகிறது...

பிரம்மாண்டமான யானையின் ஒற்றை விரல் கூட எலியை நசுக்கி பசையாக்கி விடும்... அப்படிப்பட்ட யானையை எலி தாங்குகிறது என்றால், இந்த உருவ வர்ணனையில் எதாவது சூட்சமம் இருந்தே ஆக வேண்டும் அல்லவா...!

நாம் அனுபவிக்கின்ற வேதனை என்பது யானை போல பிரம்மாண்டம் ஆனைவைதான்...

ஜீவாத்மா என்ற எலி யானையின் பாரத்தை பொறுமையுடன் தாங்குவது தான் முக்திக்கான வழியாகும் என்பதை இந்த சித்திரத்தின் ரகசிய தத்துவமாகும் எனலாம்...

ஆத்மாவை பற்றி பகவத் கீதையில் ஒரு விளக்கம் சொல்லப்படும்... 

அதாவது, ஆத்மா பெரியனவற்றில் மகா பெரியது என்றும், நுண்ணியதில் மிக நுண்ணியது என்றும் சொல்வதே அந்த விளக்கமாகும்...

உடல் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், ஆத்மா தன்னளவில் ஒரே மாதிரியானதுதான்...

பரம்பொருளான இறைவன் ஆத்மாவின் வடிவத்தை மட்டுமே காண்கிறான்... 

உடலையோ அதை சார்ந்த மற்ற பொருளையோ கடவுள் கவனிப்பது இல்லை...

இறைவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்ட ஆத்மாவின் பலம் ஆயிரம் யானைக்கு சமமானது...

பிள்ளையாரை சுமக்கும் எலி நாம் வீட்டில் தினசரி பார்க்கும் சாதாரண பெரிச்சாளி அல்ல...

இறைவனிடம் தனது ஆசாபாசங்களை வெற்றி, தோல்விகளை, கண்ணீரையும், சிரிப்பையும் முழுவதுமாக அர்பணித்து விட்ட ஆத்ம எலியாகும் அது...

*கடவுளிடம் தன்னை கொடுத்து விட்டவன் கடவுளாக மட்டும் மாறுவதில்லை...*

*கடவுளை தாங்குபவனாகவே ஆகிவிடுகிறான்... இது தான் பிள்ளையார் எலியின் தத்துவமாகும்...!*

*அர்த்தமுள்ள இந்து மதம்*

நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான்

இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்


ஒவ்வொரு நட்சத்திரமும் இன்னென்ன குணங்கள் கொண்டது என்று ஞானிகள் கண்டுணர்ந்துள்ளார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் சுழன்று வரப்படும் போது ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அது ஒத்து வராது.

மனிதர்கள் நாமும் ஒரு எண்ணம் கொண்டவர் இன்னொரு எண்ணம்  கொண்டவருடன் ஒருவருக்கொருவர் சேர்வதில்லை.

அதைப் போன்று தான் ஒரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் இன்னொரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் ஒன்று சேராது..

கார்த்திகை நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் கொண்டு ஒரு தாவர இனத்திற்குள் தன் உணர்வின் சக்தியை இயக்கும்போது

1.தன் உணர்வின் சத்தைத் “தான்… தான்…” என்று அறிந்து
2.தனக்குள் மோதும் மற்ற நிலைகளிலிருந்து
3.அது தெளிந்து உணர்ந்து இயக்கும் சக்தியாக ஆகின்றது.

அத்தகைய (கார்த்திகை நட்சத்திர அலைகள் கலந்த) மணத்தை மனிதர்கள் நாம் நுகரும் போது தெளிந்து உணர்ந்து செயல்படும் அறிவாக  அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

ரோகினி நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் ஒரு பொருளிலே பட்டால் தன்னை மறைத்துக் கொண்டு “மறையும் (மறைக்கும்) நிலைகள் பெற்றது” அந்த நிலைகள்.

விஷம் எப்படி ஒரு பொருளுக்குள் பட்ட பின் அதை மறைத்து  தெளிந்திடாத நிலைகள் ஏற்படுத்துகின்றதோ அதைப்போல அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்ட பின் மற்றொரு பொருளை அறியவிடாது மறைக்கின்றது,

ரோகினி நட்சத்திரத்தின் உணர்வின் சத்து மற்றதுடன் கலக்கப்படும் போது இது மறைகின்றது என்ற நிலையை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

இதை ஆதாரமாக வைத்துத்தான் ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக உயிரை வைத்து அன்று சாஸ்திரங்கள் எழுதினார்கள்.

1.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னென்ன நிலைகள் நடக்கும்
2.அதே சமயத்தில் இன்னென்ன கோள்கள் மாற்றமாகின்றது,
3.அந்தக் கோளுடன் இணைக்கப்படும் போது உணர்வின் தன்மைகள் மாறுகின்றது என்று
4.அன்று மெய் ஞானிகள் வானஇயல் சாஸ்திரத்தை எழுதினார்கள்.

ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் மற்ற கோளுக்குள் இணையும்போது ஒவ்வொன்றாக மாறி கோளிற்குள் பாறையாக எப்படி மாறுகின்றது?

பாறைக்குள் மாற்றத்தின் தன்மை அடைந்து அது தன் மணத்தை வெளிவிடும் போது இதே போல் மற்ற நட்சத்திரத்தின் சத்தை எடுத்து உருவான பாறையின் மணத்திற்கும் வீரிய சக்தியால் ஒன்றுக்கொன்று எப்படி எதிர்ப்பாகின்றது?

எதிர்ப்பாகும் பொழுது சுழற் காற்றாக மாறி ஒன்றுக்குள் ஒன்று மோதி எதனின் உணர்வை இதற்குள் அடக்குகின்றதோ அதனின் தன்மை இணைந்து புது உருமாற்றமாக எவ்வாறு மாறுகின்றது?

இதனின் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? அந்த உணர்வின் சத்தை எடுக்கப்படும் போது தாவர இன சத்தின் தன்மைகள் எப்படி மாறுபடுகின்றது?

தாவர இன சத்துக்கள் ஒரு நட்சத்திரத்தின் நிலைகள் கொண்டாலும் மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்கள் இதனுடன் மோதப்படும் போது எதிர் நிலையான நிலைகள் மறைந்து “நெகட்டிவ்… பாசிட்டிவ்…” என்று எப்படி இயக்கம் வருகின்றது?

நம் உயிரின் தன்மை எப்படித் துடிக்கின்றதோ இதைப் போல தாவர இனங்களுக்குள் எதிர்நிலையான உணர்ச்சிகள் மோதும் போது அந்த உணர்வால் ஈர்க்கும் ஆற்றலை எப்படிப் பெறுகின்றது?

அத்தகைய ஈர்க்கும் ஆற்றலுக்குள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கங்கள் கலந்து எதனின் ஆற்றல் அதிகமாகின்றதோ அதற்குள் எதிர்மறையான உணர்வுகளாகத் தோன்றி ஆக்கச் சக்தியான ஈர்ப்பலைகளாக மாறித் தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது?

இதை எல்லாம் ஆதியிலே அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.

இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பாறைகளாக ஆனாலும் எதிர் நிலையான மறைகளாகிக் கலவை ஆகும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் சத்து அதிகமாக அதற்குள் இணைந்தால் அது மற்றதை அடக்கிக் கோமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று உருவாகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் எதிர்ப்பு நிலையும் மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலையும் வரப்போகும் போது மூன்றும் மோதி இணைகின்றது.

அதாவது பூமிக்குள் வரும் போது எதிர் நிலைகளாகி கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்திங்களுடைய நிலைகள் மூன்றும் மோதி இரண்டறக் கலந்து ஒரு கருவாக உருவாகின்றது.

ஏனென்றால் மும்முனையாக எதுவும் மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம், காந்தம் விஷம் இது மூன்றும் இயக்குவது போல
1.வெப்பம் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மை துடிக்கச் செய்யும் விசையாக

ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் அது எவ்வாறு இருக்கின்றதோஅந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மூன்று மண்டலங்களாக இயக்குகின்றது.

வெறும் கற்பாறைகளானாலும் அந்தப் பாறைக்குள் மோதும் நிலைகள் கொண்டு ஈர்க்கும் நிலை பெற்று அது கருவாகி வடித்துக் கொண்ட சக்தியாக வைரக் கல்லாக விளைகின்றது.

இதனுடைய வீரியத் தன்மை ஆனபின் வெடித்து முழுமை அடைந்து வைரமாக வெளி வருகின்றது.

நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்பதை குருநாதர் நேரடியாகக் காட்டினார்.

இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றி அகஸ்தியன் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.

படித்ததில்..

சூட்சும சக்திகளும் நமது உடலும்!



🚩🔯🌹⚜🕉⚜🌹🔯🚩

1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?      நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது .

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது. 

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது. 

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே. 

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது, 
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது, 
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!
வாழ்வில் வளம் பெறுவோம்!

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

எட்டு காலங்கள் :


விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை - பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை - தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை - ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை - பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை - சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை - 
பூத காலம்.

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை- பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணி வரை - ராக்ஷச காலம்

பிரம்ம முகூர்த்த காலத்தில் 
திதி, நக்ஷத்ரம் சரியில்லாவிட்டாலும் சுபகாரியங்கள் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் 
வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் 
நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நக்ஷத்ரம், வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில் 
திதியினை பிரதானமாகவும், நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், 
கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது, நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ, முடிக்கவோ கூடாது.